மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கும் பழைய காய்கறி மார்க்கெட் வடக்கு ஆவணி மூல வீதியில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்னும் திறப்பு விழா காணாத நிலையில் உள்ளது. இதனால் வாகனங்களை தெருவில் ஆங்காங்கே நிறுத்தும் நிலை உள்ளது. இந்த வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த வாகன நிறுத்தும் இடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.