தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-11-30 11:22 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. அதன் உடலை வனத்துறையினர் ஆழமான குழி தோண்டி புதைக்காமல் பாதி வெளியே தெரியுமாறு புதைத்து சென்றனர். இதனால் காட்டெருமையின் உடல் அழுகி துர்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே காட்டெருமையின் உடலை மீண்டும் வெளியே எடுத்து ஆழமாக குழி தோண்டி முழுமையாக புதைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்