தெருநாய்கள் தொல்லை

Update: 2022-11-30 10:16 GMT

கோவை கணபதி காந்தி மாநகர் பகுதியில் தீயணைப்புத்துறை அலுவலகம் உள்ள சாலை மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்களில் தெருநாய்களின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தெருக்களிலும் குறைந்தது 20 முதல் 25 நாய்கள் உள்ளன. அவற்றில் சில நாய்கள் நோய்த்தொற்றுடன் காணப்படுகின்றன. அவை சிறுவர்-சிறுமியர் வெளியே செல்லும்போது துரத்துகின்றன. இதனால் அவர்களை வெளியில் விளையாட அனுப்பக்கூட மிகவும் அச்சமாக உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையில் இருந்து விடுபட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்