ஈரோடு அரசு ஆஸ்பத்தி வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் வழி காட்டும் பதாகையும், அவசர சிகிச்சை பிரிவு நுழைவு வாயில் பதாகையும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இதனை தமிழ்படுத்தினால் அனைவரும் புரிந்து கொண்டு சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்ல மிகவும் பேருதவியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.