விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-11-27 13:15 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் 3 குப்பை வண்டிகள் உள்ளன. இந்த 3 குப்பை வண்டிகளை ஓட்டுவதற்கு டிரைவர் இல்லை. துப்புரவு பணியாளர்களே குப்பை வண்டியை ஓட்டி சென்று குப்பைகளை அள்ளுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்கள் பயத்துடனே சாலையில் செல்ல வேண்டி இருக்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து நல்ல பயிற்சி பெற்ற டிரைவர்களை பணியில் அமைர்த்த வேண்டும்.

-ராஜகோபால், வாழப்பாடி, சேலம்.

மேலும் செய்திகள்