ஊட்டி மெயின் பஜார் சாலை மற்றும் கமர்சியல் சாலை ஆகிய இடங்களில் சாலையின் இருபுறமும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.