ஊட்டியில் கமர்சியல் சாலையில் கனரா வங்கி உள்ள பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி செல்லும் சாலையின் நடுவே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நடைபாதையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பத்தில் இருந்து தரைக்கு மின்கம்பி மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். மேலும் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த மின்கம்பியை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.