பெயர்பலகையை மூடிய செடி,கொடிகள்

Update: 2022-11-27 10:21 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா தாராசுரம் ரெயில் நிலையத்தில் தாராசுரம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையை சுற்றி செடி,கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் பெயர்பலகை இருப்பதே தெரியவில்லை. இதன்காரணமாக வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து தாராசுரத்துக்கு ரெயிலில் வருபவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ரெயில் பயணிகளின் நலன் கருதி பெயர்பலகையை சுற்றி வளர்ந்துள்ள செடி,கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்