புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-11-27 09:13 GMT
கடையம் யூனியன் தெற்கு கடையம் பஞ்சாயத்து தெருவில் உள்ள மின்கம்பத்தில் சேதமடைந்த மின்பெட்டி திறந்த நிலையில் கிடப்பதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு தினத்தந்தி புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக மின்கம்பத்தில் சேதமடைந்த மின்பெட்டிக்கு பதிலாக புதிய மின்பெட்டி மூடியுடன் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்