சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது இதனால் குடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.