போலீசார் ரோந்து செல்வார்களா?

Update: 2022-11-23 17:28 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-சங்ககிரி சாலையில் உள்ள பழைய பெட்ரோல் பங்க் அருகில் மினி டெம்போ ஸ்டாண்ட் உள்ளது. கடந்த 10 நாட்களாக அந்த டெம்போக்களில் இருந்த பேட்டரிகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடி சென்று விடுகின்றனர். இதுவரை 3 பேட்டரிகள் திருட்டு போய் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் அந்த பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து சென்று நடவடிக்கை எடுப்பார்களா?

-புலிக்குட்டி, பள்ளிபாளையம்.

மேலும் செய்திகள்