மரத்தை அகற்ற வேண்டும்

Update: 2022-11-23 12:07 GMT

 ஆரல்வாய்மொழி பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் ஒரு பெரிய மரம் பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் காற்றினால் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, பட்டுப்போன நிலையில் நிற்கும் மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

மேலும் செய்திகள்