காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து சோமங்கலம் வழியாக தாம்பரம் செல்வதற்கு 4 மாநகர பஸ்கள்(தடம் எண்:89டி) இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் உரிய நேரத்திற்கு சரிவர இயக்கப்படுவதில்லை. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகளும் , வேலைக்கு செல்வோரும் இரவு நேரங்களில் பஸ் வசதி இல்லாமல் பரிதவிக்கும் நிலையுள்ளது. பஸ்களை உரிய நேரத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்