வேடசந்தூர் அருகே நாகம்பட்டி ஊராட்சியில் தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், தார்சாலை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் நாகம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.