சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் 5 ஆண்டுகளாக நூலக கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால் கட்டிடம் சேதமடைந்து மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வாசகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நூலக கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.