நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நேரு பூங்கா ஆகியவற்றிற்கு 2 நடைபாதை மேம்பாலங்களும், போலீஸ் நிலையம் முன்பு ஒரு நடைபாதை மேம்பாலமும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இவற்றில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு போடப்பட்ட மேம்பாலத்தை மட்டும் மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற 2 நடைபாதை மேம்பாலங்களும் பயனற்று காணப்படுகின்றன. மேலும் இவை மதுபிரியர்களின் திறந்தவெளி பார் போல பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த நடைபாதை மேம்பாலங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.