சுகாதார நிலையம் வேண்டும்

Update: 2022-11-23 09:10 GMT
கோவை கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சி 1-வது வார்டு செல்வபுரம் குருடிமலை அடிவாரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ சேவையை பெற 7 மைல் தூரத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதற்கு போக்குவரத்து வசதி கூட சரிவர இல்லை. எனவே செல்வபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்