செஞ்சி தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் சாலை, வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் தற்போது பெய்து வரும் மழையினால் தண்ணீா் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக தண்ணீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே நாட்டார்மங்கலம் கிராமத்தில் சாலை, வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.