விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் கோழிப்பட்டு கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை பாழடைந்து கிடக்கிறது. இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். மேலும் பயணிகள் நிழற்குடை மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே பாழடைந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?