விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்வதோடு, தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகளின் கையில் இருக்கும் திண்பண்டங்களை பிடுங்கி செல்கின்றன. இந்நிலையில் பொதுமக்கள் குரங்குகளை விரட்ட முயன்றால் கடிக்க சீரிப்பாய்கின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.