காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. இங்கு நியமிக்கப்பட்ட டாக்டர்கள், ஊழியர்கள், காரைக்காலில் பிற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் புதுச்சேரியில் பணியாற்றுவதால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு பணியிடம் மாற்றம் செய்ய புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் முன்வர வேண்டும்.