சேலம் மரவனேரி பகுதியில் பிள்ளையார் நகர் முதல் ஐஸ்வர்யா கார்டன் வரை உள்ள சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் பொது மக்களை துரத்துவதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளையும் துரத்துவதால் அவர்கள் அடிக்கடி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கண்ணன், மரவனேரி, சேலம்.