பெங்களூரு லின்டன் சாலையில் சாக்கடை வடிகால் உள்ளது. அதன் அருகே உள்ள குடிநீர் குழாயில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த உடைப்பு சரிசெய்யப்படவில்லை. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி சாக்கடை வடிகாலில் வீணாக கலந்துவிடுகிறது. எனவே அதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.