பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளில் சிலர் தற்போது சாலையோரங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது காய்கறி மார்கெட்்டுக்கு செல்லும் சாலையில் வியாபாரிகள் இருபுறமும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும், ஏற்கனவே நகராட்சி கட்டிடங்களில் வாடகை கொடுத்து இயங்கும் மருத்துவமனைகள், கடைகள் உள்ளிட்டவைக்கும், அங்கு வருபவர்களுக்கும் இடையூறாகவும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் நகராட்சி வாடகை கட்டிடங்களில் இயங்கும் மருத்துவமனைகளுக்கும், கடைகளுக்கும் பொதுமக்களால் செல்ல முடியவில்லை. இடையூறு இல்லாமல் கடை வைககுமாறு அவர்களிடம் கூறினால் மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட் சாலையில் உள்ள போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.