ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாரச்சந்தை பகுதியில் குப்பைகளை பிரிக்கும் கூடம் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதனால் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த குப்பைகளை பிரிக்கும் கூடத்தை வேறு பகுதியில் அமைத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.