பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் குன்னுமேடு சிற்றேரியில் சிதிலமடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 14-ந்தேதி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் அந்த பழைய மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை நட்டனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.