மயான கொட்டகை வேண்டும்

Update: 2022-11-20 10:37 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மணலி அருகே குரும்பல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மயான கொட்டகை இல்லை. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை ஆற்றங்கரையோரம் திறந்தவெளியில் வைத்து இறுதி சடங்குகள் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கிராமத்தில் மயான கொட்டகை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்