சாலையில் கிடக்கும் வேர் அகற்றப்படுமா?

Update: 2022-11-16 14:49 GMT

பெங்களூரு ராஜாஜிநகர் 4-வது பிளாக் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அந்த மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது. ஆனால் வேரை அகற்றாமல் மாநகராட்சி ஊழியர்கள் அங்கேயே விட்டு சென்று உள்ளனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவில் வேகமாக வரும் வாகனங்கள் அந்த வேரின் மீது மோதும் அபாயமும் உள்ளது. விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வேரை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்