ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

Update: 2022-11-16 11:38 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பரமநல்லூர் அருகே அரசலாறு உள்ளது. இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் படர்ந்து உள்ளது. இதனால் மழை வெள்ள காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல தடையாக உள்ளது. மேலும் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் திருமருகல்

மேலும் செய்திகள்