செஞ்சி தாலுகா துத்திப்பட்டு கிராமத்தில் இருளர்களுக்காக தனியாக சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாமல் கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுடுகாட்டை மீட்டுத்தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.