கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், கே.பேட்டை ஊராட்சி பகுதியில் நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகத்தின் அருகே செல்லும் தென்கரை வாய்க்காலில் நடைபாலம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக ஒரே நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் மட்டுமே செல்ல முடியும். அந்த அளவிற்கு குறுகலாக உள்ள பாலத்தில் பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் செல்லும்போது சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே குறுகலாக உள்ள இந்த பாலத்தை அகற்றி அனைத்து தேவைகளுக்கும் பொதுமக்கள் வாகனங்களில் சென்றுவரும் வகையில் அகலமான பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.