பெங்களூரு சவுத் எண்டு சர்க்கிள் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சிலர் கூடாரம் அமைத்து கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.