வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த ராமாபுரம் வழியே அன்னங்குடி, லத்தேரி வரையிலும், திரும்பி வரும்போது ராமாபுரத்தில் இருந்து லப்பை கிருஷ்ணாபுரம், சோழமூர், ரங்கம்பேட்டை கேட், வடுகந்தாங்கல், கே.வி.குப்பம், குடியாத்தம் வரையிலும் பயணிகள் பஸ்களில் செல்கின்றனர். இவர்களுக்காகக் கட்டப்பட்ட நிழற்குடை பழுதடைந்து, கூரையில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்தபடி வெளியே தெரிகிறது. அந்தப் பயணிகள் நிழற்குடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பார்களா?
-நந்தகோபால், கே.வி.குப்பம்.