ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை எதிரே 2 பட்டுப்போன வேப்பமரங்கள் உள்ளன. அந்த மரங்கள் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது. அந்த மரங்களை அகற்ற பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.