ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ளது. இதனை கடந்தசில நாட்களாக சரியாக திறப்பது கிடையாது, பூட்டியே உள்ளது. மருத்துவர்களும் சரியாக வருவதில்லை எனக்கூறப்படுகிறது. அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.