பயணிகள் நிழற்குடை சேதம்

Update: 2022-07-16 18:27 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளிைய அடுத்த ஜெயபுரம் பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. அது, கட்டி 26 ஆண்டுகள் ஆகின்றன. நிழற்குடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளிேய தெரிகின்றன. எனினும், பயணிகள் நிழற்குடை எந்நேரமும் இடிந்து விழலாம் என அஞ்சப்படுகிறது. வெயில், மழையின்போது அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் அச்சத்துடன் நிற்கின்றனர். அது, பயணிகள் பயன்படுத்த தகுதியற்றதாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும்.

-சுகவனம், நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்

மயான வசதி