விபத்து அபாயம்

Update: 2022-11-13 10:14 GMT

ஊட்டி கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இவை அங்குள்ள சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக உலா வருவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் அவை நடந்து செல்லும் பாதசாரிகளை சில நேரங்களில் தாக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் பீதி அடைகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையில் குதிரைகளை சுற்றத்திரியவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்