தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

Update: 2022-11-13 08:29 GMT
சங்கரன்கோவில் அருகே பெரியசாமிபுரத்தில் இருந்து பாம்புகோவில் சந்தை செல்லும் சாலையில் உள்ள கால்வாயின் குறுக்கே தரைமட்ட பாலம் உள்ளது. சாலை வளைவில் உள்ள இந்த பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால், இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே அங்கு தடுப்புச்சுவருடன் கூடிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்