புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-11-13 08:28 GMT
நெல்லை அருகே குன்னத்தூரில் இருந்து பாடகசாலை செல்லும் வழியில் வாய்க்கால் பாலத்தின் தென்புறத்தில் பாதையில் இருந்த மின்கம்பத்தால் விவசாய நிலங்களுக்கு டிராக்டர், நெல் அறுவடை எந்திரம் செல்ல முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து திருவடி என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அந்த மின்கம்பத்தை பாதை ஓரமாக மாற்றி அமைத்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்