துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் பாதிப்பு

Update: 2022-07-16 16:51 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாயில் பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் பல்வேறு இடங்களில் இருந்து மீன் விற்பனையாளர்கள் சரக்கு ஆட்டோக்களில் மீன்களை எடுத்து வந்து உயிர் மீன்களாக விற்பனை செய்கின்றனர். மீன்களை அங்கேயே சுத்தம் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்