பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் செல்லும் தெருவில் சாலையோரம் தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் இப்பகுதியில் நடந்து செல்லும் பொது மக்களுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.