விருதுநகர் அருகே தவசிலிங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகே பள்ளி அமைந்துள்ளதால் மாணவர்களும், பஸ்சுக்காக காத்திருக்கும் அப்பகுதி மக்களும் வெயிலிலும் மழையிலும் நிற்க வேண்டிய சூழல் உள்ளது. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.