சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டி பழைய மாதாகோவிலுக்கு அருகே பழமையான பள்ளிக்கட்டிடம் உள்ளது. பல ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதால் அந்த கட்டிடத்தில் சிலர் மது அருந்துவதும், சீட்டு விளையாடும் என சமூக விரோத செயல்களுக்கு கூடாராமாக இருக்கிறது. இது அந்த பகுதி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கவின், ஆண்டிப்பட்டி, சேலம்.