கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே உள்ள கட்டிபாளையம் பகுதியில் அப்பகுதி குழந்தைகளின் நலன் கருதி அங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பதற்காக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் சுற்றுச்சுவர் கட்டித் தரப்படவில்லை. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படாததால் பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து விஷ ஜந்துக்கள் பள்ளிகளுக்குள் சென்று வருகின்றன. இதனால் பள்ளிக்கூடத்திற்கு வரும் குழந்தைகள் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.