அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் தனியா சிமெண்டு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு கிழக்கு புறத்தில் முட்டுவாஞ்சேரி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அதிகளவில் பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகிறது. மேலும் மு.புத்துர் கிராமத்தில் இயங்கி வரும் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு டிப்பர் லாரிகள் சென்று வருகிறது. மேலும் வி. கைகாட்டி முதல் தனியார் சிமெண்டு ஆலையின் மெயின் கேட் வரை கனரக வாகனங்களை அதிக அளவில் போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தி விடுகின்றனர். மேலும் இவ்வழியே செல்லும் கனரக வாகனங்களால் சாலையின் இருபுறமும் சுண்ணாம்பு மண்கள் தேங்கி புழுதி படலமாக உள்ளது. மேலும் சில இடங்களில் அதிகளவில் மணல் தேங்கியுள்ளது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கும் போது இந்த மண்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை சறுக்கி விடுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதுடன் இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு விடுகிறது. இப்பகுதி எப்போதும் புழுதி மண்டலமாகவே காட்சியளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.