அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வணங்குவதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமயபுரம் நால் ரோட்டில் இருந்து பெரம்பலூர் பஸ் நிறுத்தம் அருகே செல்லும் வழியில் சாலையோரத்தில் உள்ள மரங்கள் நடுவிலேயே குடிமகன்கள் அதிகாலையிலேயே மதுபாட்டில்களை வாங்கி அங்கேயே அமர்ந்து குடித்துவிட்டு கூச்சலிடுகின்றனர். இதனால், அவ்வழியே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை ஓரத்தில் அமர்ந்து குடித்து விட்டு அநாகரிமாக பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பக்தர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.