கரூர் மாவட்டம், நடையனூரில் பேச்சிப்பாறை செல்லும் தார்சாலை ஓரத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இப்பகுதியை சேர்ந்த இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் சுடுகாடு கட்டுப்பட்டது. இந்த சுடுகாட்டில் இறந்தவர்களை புதைத்தும், எரித்தும் வந்தனர். இந்நிலையில் இந்த சுடுகாட்டுக்குள் ஏராளமான செடி, கொடிகள் முளைத்து சுடுகாட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் திடீரென இறந்தவர்களை உடனடியாக புதைக்கவோ, எரிக்கவோ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.