கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாபாளையம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த வாசகர்களின் நலன் கருதி மரவாபாளையம் நெடுஞ்சாலை அருகில் நூலகம் கட்டப்பட்டது. இந்த நூலகத்தில் பல்வேறு வகையான நூல்கள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தினசரி நாளிதழ்களும் வாங்கப்பட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வாசகர்கள் படித்து பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளாக நூலகம் திறக்கப்படாமல் பூட்டிய நிலையிலேயே இருக்கிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த வாசகர்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.