அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ராஜீநகர் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலில் ஏராளமான கருவேல மரங்கள், செடி- கொடிகள் முளைத்து தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த வாய்க்காலின் வழியாக மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழி இன்றி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.