வடிகால் ஓடை தேவை

Update: 2022-11-09 12:38 GMT

மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மிஷின்விளையில் மாசிலாமணி தெரு உள்ளது. இந்த தெருவில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. மழை நேரங்களில் தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் அங்கேயே தேங்கி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை அமைந்து தண்ணீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

-விக்டோரியா, மாசிலாமணி தெரு, மயிலாடி.

மேலும் செய்திகள்